குடும்பத்தில் உள்ள யாவரும் அதிகாலையில்
எழுந்து மனதில் மானசீக கோயில்
எழுப்பி மேலே உள்ள மந்திரங்களை
கூறிவந்தால், ஆரோக்கியம் கூடும்,
துன்பம் தீரும், பல காரியங்கள்
கைகூடும், பகவானின் அருள் கிடைக்கும்.
திருமணம்
வெற்றி பெற:
திருமண நிகழ்ச்சியில்
கலந்து கொள்ளும் போது இந்த மந்திரத்தை
பலமுறை கூறி மணமக்களை வாழ்த்த
வேண்டும். இதனால் வாழ்த்துபவருக்கு
புண்ணியமும் வெற்றியும் சேரும்.
மணமக்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியும்
முன்னேற்றமும் கூடும்.
ஆன்மா வெற்றி
பெற:
இறந்து
போன ஒரு ஆத்மாவிற்கு உயிருடன்
வாழும் பல ஆத்மாக்கள் மேலே உள்ள
மந்திரம் கூறி பகவானிடம் கெஞ்சி
இந்த ஆத்மாவிற்கு நற்கதி
கொடுங்கள் என்ற கோரிக்கையை இறப்பு
வீட்டில் வைத்தால் உடனே ஆத்மாவிற்கு
நல்லது கிடைக்கும்.
செய்முறை:
ஒருவர்
மந்திரம் சொல்லவேண்டும். மற்றவர்கள்
அதை திரும்ப சொல்ல வேண்டும்.
இதை வெட்கப்படாது பத்துபேர் ஒன்று
சேர்ந்து செய்தால் அந்தக் குடும்பம்
அமைதியும் உயர்வும் பெறும். இதை
செய்பவர்களுக்கு பகவான் அருள்
கிடைக்கும்.
குறிப்பு:
சிறிய
அளவு உப்புதான் எல்லா வகைச்
சமையலையும் ருசிக்க வைக்கிறது.
இதை போன்று இந்த மூன்று
வரி மந்திரம் உங்கள் வாழ்க்கையை
மகிழ்ச்சியடையவைக்கும்.
செயல்படுத்துங்கள் வெற்றிபெறுங்கள்.
"இந்துமதம் ஒரு
இனியமதம்"