ஒம் நமச்சிவாய வாழ்க வாழ்க    ஒம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க    ஒம் சற்குருநாதர் திருவடிகளே சரணம் சரணம்
 HOME  ABOUT US  ARTICLES GALLERY  CONTACT US  
 
  Home » Services
  • சான்றோர்களின் அரவணைப்பில் இருப்பவர்களுக்கு எவ்வளவு பிரச்சனைகள் குறுக்கிட்டாலும் அதன் முடிவு உயர்வானதாகிவிடும்.

  • ஒருவனுக்கு வேண்டியது கிடைக்கிறது, மற்றொருவனுக்கு தேவையானது அவன் தேடியும் கிடைப்பதில்லை. ஆனால் நல்ல மனதோடு இறைவனைத் தேடிய ஒவ்வொருவருக்கும் பகவான் கிடைக்காமல் போனதில்லை. அவன் அருள் கிட்டாமல் இருந்ததில்லை.
வாழ்க்கை சுவாரஸ்யமானது.
  1. வாலிபம் தவறாய் முடியும்
  2. வயோதிகம் சஞ்சலத்தில் முடியும்
  3. இடைப்பட்ட காலம் போராட்டமாகும்.
என்பது டிஸ்ரேலியின் பழமொழி. ஆனால் இளமையிலேயே இறைபக்தி, கொண்டு குரு கிடைத்து தியானத்தை கடைபிடித்து வருவோமேயானால் எல்லாப் பருவமும் ஆனந்தமாக முடியும்.

மகிழ்ச்சி வெளியே இல்லை. மகிழ்ச்சியின் ஆதாரம் மனதிற்குள்தான் புதைந்து கிடக்கின்றது. அது கடவுளுக்கும், மனிதனுக்கும் உள்ள நட்புறவில் நிறைவு பெறுகிறது.

மனிதனால் கிடைக்கும் மகிழ்ச்சி நீர்க் குமிழிபோல் மறைந்து போகும். ஆனால் பகவானால் கிடைக்கும் மகிழ்ச்சி ஆனந்தமாகி விடுகிறது.

கடவுளுக்கும் மனிதனுக்கும் நட்புறவை வளர்த்துக் கொள்ளும் முறையைப் போதிப்பவரே குருவாகிறார். நல்லது ஒன்று இருக்குமேயானால் அதைப் பெற அல்லது மற்றவரைப் பெற வைக்க போராடித்தான் ஆக வேண்டும் என்பது நியதி.

ஒருவருக்கு வயிற்றில் கட்டி இருக்கிறது என்றால் அதை நீக்க டாக்டர் போராடித்தான் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது. இதைப் போன்றுதான் ஒவ்வொரு குருமார்களும் மற்றவர்களுக்காக போராடுகின்றார்கள்.

'தர்மங்களில் மேலானது
நமது சமுதாயத்தில் பக்தியையும்
சமாதானத்தையும் நிலவச் செய்தலேயாகும்'

முடிந்தவரை நாம் இறைவனை நினைக்கப் பழகிவர வேண்டும். அப்படி இறைவனை நினைக்க முயலும் போது என்ன மாதிரி தடைகள் வரும். அதை எப்படி தியானப் பயிற்சியால் வெற்றி பெறலாம் என்பதை இந்த இணையதளத்தில் தொகுந்து வழங்கவுள்ளேன்
 
'போரின் நேரத்தில் வீரனையும்,
கோபத்தின் நேரத்தில் பொறுமையாளனையும்,
தேவையின் நேரத்தில் நண்பனையும்'

தெரிந்து கொள்ளலாம் என்பது போல ஆன்மீக சந்தேகங்கள் நிறைந்த உங்கள் மனதிற்கு இந்த இணையதளம் சரியாக வழிகாட்டும் என்பதை என்றும் நம்பும்,
உங்கள் அன்புள்ள,
மகாகுரு. சிவா துரைமுருகர்
 
நமது சபையின் நற்பணிகள
1. புதிதாக வரும் அன்பர்களுக்கு இறை வணக்கத்தின் முக்கியத்துவத்தையும், தியானத்தால் ஏற்படும் நல்ல மாற்றத்தையும் பற்றிய நுழைவாயில் சொற்பொழிவு இருக்கும்.

2. ஞாயிறுதோறும் வரும் அன்பர்களக்கு உடல் ஆரோக்கியம் பெற இலவசமாக யோகப்பயிற்சிகள் போதிக்கப்படுகிறது. அத்துடன் மதிய உணவும் இலவசமாக வழங்கப்படுகிறது. (கட்டணம் கிடையாது)

3. தொடர்ந்து வரும் அன்பர்களுக்கு தியானப்பயிற்சி அளித்து அவர்களை தெய்வீக ஆற்றல் பெற வைப்பது. இதனால் நாட்டில் பல நல்லவர்கள் எல்லா துறைகளிலும் பிரகாசிப்பார்கள்.

4. நாட்டில் ஆன்மீகம் வளர அமைதி நிலைத்தோங்க, வரும் அன்பர்களை தியானிக்க வைப்பது. அதற்காக ஒவ்வொருவரையும் உழைக்க வைப்பது.
Designed By profitideal web design and hosting company
© 2007 Dhuraimurugar Marabu Sitthaanda Dhiyana Sabai